கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கோட்டை ரெக்லமேஷன் வீதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
இந்நிலையில், சந்தேகநபரின் புகைப்படத்தினை வெளியிட்டு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் (கோட்டை பொலிஸ் OIC – 071-8591555, குற்றப் புலனாய்வுப் பிரிவு – கோட்டை – 071-8594405) என்ற பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.