Home இலங்கை அரசியல் தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் விதிக்கப்படவுள்ள தண்டம் : வெளியான அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் விதிக்கப்படவுள்ள தண்டம் : வெளியான அறிவிப்பு

0

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் விதிக்கப்படவுள்ள தண்டம் : வெளியான அறிவிப்பு | Penalty For Failure To Comply With Election Duties

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்துக்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version