சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சந்திரிகா நீண்ட காலம் அரசியல் செய்தவர் என்பதால் சுதந்திரக் கட்சியில் அவர் போஷகர் என்ற பதவி நிலையில் இருக்க வேண்டும்.
நெடுந்தீவில் மதுபான விற்பனை அனுமதிக்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி
தேவையான ஆலோசனை
அந்தப் பதவியில் இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கலாம் அத்தோடு மைத்திரிபால சிறிசேன பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்.
அவரைப் பற்றி கருத்து வெளியிட்டு எனது நேரத்தை வீணடிக்கத் தயாரில்லை அதேவேளை மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு நான் தயாரில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் களனி அமைப்பாளர் என்ற வகையில் அந்தக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!
புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |