சிறிலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட காரணத்தால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடுமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த நியமனம் தொடர்பில் விரைவில் பேச்சுக்களை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமென திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக நேற்றைய தினம் விஜேயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய நியமனம்
அரசியல் வட்டாரங்களில் விஜேயதாச ராஜபக்சவின் நியமனம் பேசுபொருளாகியுள்ள நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவான விஜேதாச ராஜபக்ச, தனது கட்சியின் கொள்கைகளை மீறும் வகையில் தற்போது சுதந்திர கட்சியில் பதவியேற்றுள்ளதாக திஸ்ஸ குட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கட்சியின் அரசியலமைப்புக்கமைய, ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் மற்றொரு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறாக செயல்படும் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற உறுப்புரிமை ஆகியவை நீக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் நடவடிக்கை
எனினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரை சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு பேச்சுக்களையும் முன்னெடுக்கவில்லை என திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், விரைவில் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |