தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத
யாத்திரை நேற்று (25) காலை 9 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து
ஆரம்பமாகியுள்ளது.
சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரிகை செல்கின்ற 4
இளைஞர்களுக்கும் ஆசி வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை
நூற்றுக்கணக்காணோரின் பங்களிப்புடன் ஆரம்பமானது.
தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசிவழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள்
இடம் பெற்றன. அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.
இதில் தேசிய இளைஞர்
சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலய நிர்வாக பணிப்பாளர் மாசேல சமல் பெரேரா
வடக்கு பணிப்பாளர் கே.காமினி, கிளிநொச்சி பணிப்பாளர் யாழ்ப்பாண உதவி
பணிப்பாளர் திருமதி வினோதினி, இளைஞர் சேவைகள். உத்தியோகஸ்தர்கள்,
பிரதேசங்களின் இளைஞர் சம்மேளங்களின் உறுப்பினர்கள் நி்வாகிகள், பருத்தித்துறை,
கரவெட்டி, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.