Home இலங்கை அரசியல் அநுரவின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு பணம் செலவழிக்கப்பட மாட்டாது: சுனில் ஹந்துன்நெத்தி

அநுரவின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு பணம் செலவழிக்கப்பட மாட்டாது: சுனில் ஹந்துன்நெத்தி

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதன் பின்னர் பதவிப் பிரமாண வைபவத்திற்கு பணம் செலவழிக்கப்பட மாட்டாது என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வுகளுக்கான செலவுகள் மிச்சப்படுத்தப்பட்டு அன்றைய இரவுச் செய்தியில் குறித்த விடயம் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி

மேலும், தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/for-anurava-s-swearing-in-ceremony-1725700299

NO COMMENTS

Exit mobile version