Home முக்கியச் செய்திகள் கொழும்பில் அரசியல்வாதி மீது துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

கொழும்பில் அரசியல்வாதி மீது துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

0

புதிய இணைப்பு 

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முதலாம் இணைப்பு 

மீகொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (12.08.2025) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராக சாந்த முதுங்கொடுவ என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது சிற்றூந்தில் வந்த மர்ம நபர்களால் அவர் சுட்டு கொள்ளப்பட்டுள்ளார். 

இதனையடுத்து அவர், ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version