Home முக்கியச் செய்திகள் தேரர் போல வேடமிட்டு நடமாடும் தேசபந்து : சிக்கப்போகும் ஊழல் அரசியல்வாதிகள்

தேரர் போல வேடமிட்டு நடமாடும் தேசபந்து : சிக்கப்போகும் ஊழல் அரசியல்வாதிகள்

0

தேடப்பட்டு வரும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், விகாரையொன்றிலே தேரர் போல வேடமிட்டு நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பஸீர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விகாரைகளுக்கு சென்று பார்வையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர், அவ்வாறு ஒழிந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக காணப்படுவதுடன் ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமான 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கணேமுல்ல சஞ்சீவ படுகொலை, தேசபந்து தென்னகோன் விவகாரம் மற்றும் பலதரப்பட்ட தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி, 

https://www.youtube.com/embed/boESjx0upII?start=344

NO COMMENTS

Exit mobile version