ஜனாதிபதி தேர்தலுக்கு (Presidential Election) முன்பாக மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி வடமேல் மாகாண ஆளுநராக தற்போது பதவி வகிக்கும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) தென்மாகாணத்துக்கு மாற்றப்படவுள்ள நிலையில் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்
நியமிக்கப்படவுள்ளார்.
2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பேராசிரியர் எச்சரிக்கை
பதவி மாற்றம்
இந்நிலையில், தென்மாகாண ஆளுநராக செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு
நெருக்கமானவர் எனக் கருதப்படும் விலி கமகே ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்.
மேலும், இம்மாத இறுதிக்குள் குறித்த பதவி மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் குழப்பம்
ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |