நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16 இன் கீழ் நாடாளுமன்றத்ததை கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம்
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் பெருமளவான மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Hon. Prime Minister must summon Parliament immediately, and I have formally requested that she do so under Standing Order 16. people are suffering like never before, entire villages submerged, homes destroyed, families displaced, and children without food or clean water. Many are…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) December 8, 2025
இதனால் மக்கள் வாழ்க்கைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதனை இன்றளவும் துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளது.
அத்துடன், இவ்வாறான அனர்த்த நிலைமையின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மிக விரைவில் பொறுப்புடன் தலையிட வேண்டும் எனவும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வாழ்க்கையை அனைத்துத் துறைகளிலும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் இதைவிட முறைப்படியான விதத்தில் தலையிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
