Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்து

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்து

0

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) பயணித்த கார் புத்தளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் (Puttalam) – கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று (13) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, முன்னாள் அமைச்சர் பயணித்த கார் விபத்தை தடுப்பதற்காக சற்று விலக முற்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

அவ்வேளையில் கார் வீதியை விட்டு விலகியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version