Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபா செலவு

அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபா செலவு

0

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான (Presidential Election) வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் (Department of Government Printing) மதிப்பீடு செய்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே (Gangani Liyanage) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தமுறை அதிபர் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு 

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணியாளர்கள் அரச அச்சகத் திணைக்களத்திடம் உள்ளதாகவும் அச்சகமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/70-lakh-ballot-papers-for-sl-presidential-election-1720859842

NO COMMENTS

Exit mobile version