Home முக்கியச் செய்திகள் மரண தண்டனை கைதி துமிந்த சில்வா வைத்தியசாலையில்

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா வைத்தியசாலையில்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா (Duminda Silva) மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு இணங்க கடந்த 10ஆம் திகதி அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

திடீர் சுகயீனம்

அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo Hospital) பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதான மருத்துவர் சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version