Home முக்கியச் செய்திகள் 20 மில்லியன் ரூபாய் மோசடி! முன்னாள் அரச வங்கி கடன் அதிகாரி கைது

20 மில்லியன் ரூபாய் மோசடி! முன்னாள் அரச வங்கி கடன் அதிகாரி கைது

0

  போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தொழிலதிபர்களுக்கு கடன்களை வழங்கியதற்காக அரச வங்கியின் முன்னாள் கடன் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இவரின் செயற்பாட்டால் வங்கிக்கு கிட்டத்தட்ட ரூ.20 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 பன்னிப்பிட்டிய, பெலவத்தையைச் சேர்ந்த 40 வயதான முன்னாள் வங்கி அதிகாரி, செவ்வாய்க்கிழமை (15) குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கடன்களுக்கு கொமிஷன் பெற்ற அதிகாரி

சந்தேக நபர் கடன்களுக்கு கொமிஷன் பெற்றதாகவும், வணிகர்கள் உட்பட பல நபர்களுக்கு கடன் வழங்குவதற்காக போலி ஆவணங்களை வரைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 போலி ஆவணங்களை வரைவதற்காக சந்தேக நபர் கடன் பெறுபவர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.

 சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார், அதே நேரத்தில் CID மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version