Home உலகம் இஸ்ரேலுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டியவருக்கு கனடாவில் நேர்ந்த கதி

இஸ்ரேலுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டியவருக்கு கனடாவில் நேர்ந்த கதி

0

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் துஷ்பிரயோகங்களை விசாரித்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பால்க், கனேடா பயணத்தின் போது தேசிய பாதுகாப்பு காரணத்தைக் குறிப்பிடப்பட்டு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கசா தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள அவர் கனடாவுக்கு சென்றிருந்தபோது, ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் அவர் மற்றும் அவரது மனைவி குற்றவாளிகளைப் போல கையாளப்பட்டதாக கூறியுள்ளார்.

தாக்குதல்களில் கனடாவின் பங்கு

95 வயதான சர்வதேச சட்ட நிபுணர் பால்க், “இந்நாள் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்பட்டதில்லை” எனவும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க குடிமக்களான அவர் மற்றும் அவரது மனைவி எல்வர், ஒட்டாவாவில் நடைபெறவிருந்த பாலஸ்தீன தீர்ப்பாயத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பாயம், இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக காசா மீது நடத்திய தாக்குதல்களில் கனேடிய அரசின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்வதற்காக சர்வதேச மனித உரிமை மற்றும் சட்ட நிபுணர்களை ஒன்று திரட்டியது.

கனடாவின் வழங்கிய விளக்கம் 

இந்நிலையில், குறித்த நிகழ்வுக்காக வந்த பால்க், தனக்கும் மனைவிக்கு்ம நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டதுடன், காசா மற்றும் இஸ்ரேல் தொடர்பான அவர்களின் பணிப்புரைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து உண்மையை வெளிப்படுத்த முயல்பவர்களை இடையூறு செய்யும் ஒரு உலகளாவிய போக்கின் பகுதியாக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கனடாவின் எல்லை சேவை முகமை (CBSA) இந்த சம்பவம் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமே என்றும், இதை தவறாகப் பொருள்படுத்த வேண்டியதில்லை என்றும் விளக்கம் வழங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version