Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக, நகர அபிவிருத்தி மற்றும்
வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க,
ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு (Colombo) மாவட்ட மக்களுக்குத்
தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியொன்று இடம் பெற்றுள்ளது.

கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த
வேலைத்திட்டம், கோட்டை தொடருந்து நிலையம், கோட்டை பிரதான பேருந்து நிலையம், பஸ்தியன்
மாவத்தை, போதிராஜா மாவத்தை, பிரதான வீதி, ஹெட்டி வீதி, ஐந்துலாம்பு சந்தி
உட்பட ஒவ்வொரு வீதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

அதில் கொழும்பு கோட்டை வர்த்தக சமூகத்தினர் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பெரும் மக்கள் கூட்டம்

இந்த வேலைத்திட்டத்தை இரண்டு நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொழும்பு நகரில்
யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் நாளிலேயே பெரும் மக்கள் கூட்டம்
அலைமோதியுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வரவேற்பு நிகழ்வுகளும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

சுயதொழில் புரிவோர் சங்கம், சுயதொழில் புரிவோர் பெண்கள் சங்கம், மக்கள் குரல்
அமைப்பு, பொது ஜன விஜய பெரமுன, உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்,
தமிழ் கலைஞர்கள் சங்கம், தேசிய பல்கலைக்கழக முன்னணி, சுயதொழில் புரிவோர் படை,
நுகர்வோர் முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்காக இணைந்துகொண்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version