Home உலகம் யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வடகொரியா

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வடகொரியா

0

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வடகொரியா (North Korea) முதற்தடவையாக வெளியிட்டுள்ளது.

தமது நாட்டின் அணுவாயுத களஞ்சியத்தை அதிகரிப்பது தொடர்பில் வடகொரியா தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

யுரேனியம் செறிவூட்டல்

ஐக்கிய நாடுகளின் தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுதங்கள் மற்றும் அணுசக்தி மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.

எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய  ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

யுரேனியம் செறிவூட்டல் வசதிகள் தமது நாட்டில் இருப்பது தொடர்பில் இதுவரை உலகிற்கு தெளிவாக வெளிப்படுத்தாது வந்த வடகொரியா, தற்போது குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

NO COMMENTS

Exit mobile version