யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் வைத்து நான்குபேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் யாழ்ப்பாணம் காவல்துறை போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ்
நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை
சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர்
பருத்தித்துறையைச் சேர்ந்த மூவர் கைது
இவர்களிடம் இருந்து 25 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளும்
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இவர்கள் 44, 47, 48 வயதுடையவர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஒருவர் கைது
இதேவேளை யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்
ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
