Home இலங்கை அரசியல் கோட்டபாய அரசில் இடம்பெற்ற பாரிய மருத்துவ மோசடி – அம்பலப்படுத்தும் அநுர அரசு

கோட்டபாய அரசில் இடம்பெற்ற பாரிய மருத்துவ மோசடி – அம்பலப்படுத்தும் அநுர அரசு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமகால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொவிட் காலத்தில் ரெபிட் என்டிஜென்
சோதனை கருவிகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மருத்துவ மோசடி

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனம் ரெபிட் என்டிஜென்
சோதனை கருவிகளை வாங்குவதற்கு மிகப்பெரிய தொகையை செலவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கூடுதலாக, இந்த நிறுவனத்திடமிருந்து இரண்டு மில்லியன் ரெபிட் என்டிஜென்
சோதனை கருவிகளை வாங்குவதற்கு 2.2 பில்லியன் ரூபா மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது.


கொவிட் தொற்றுநோய்

நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுநோய் காலத்தில் தடுப்பூசிகள் மற்றும் விரைவான என்டிஜென்
சோதனை கருவிகளை கொள்வனவுக்காக 3.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதில், 2.2 பில்லியன் ரூபா, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version