Home முக்கியச் செய்திகள் இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் பெண்களின் மோசடி அம்பலம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் பெண்களின் மோசடி அம்பலம்

0

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த பிரான்ஸை(france) சேர்ந்த இரண்டு பெண்கள் தமது நாட்டில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தாம் இலங்கையில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.

இவர்கள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அளித்த முறைப்பாட்டில் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இருவரும் அனுராதபுரத்தில் வீதியால் சென்றவேளை நபர் ஒருவரால் தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர். 

காவல்துறையில் அளித்த முறைப்பாடு

தாம் வீதியால் சென்ற போது எதிரே வந்த நபர் தம்மீது அங்க சேட்டையில் ஈடுபட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த வேளை துவிச்சக்கர வண்டியில் இருந்து வீழ்ந்து காயம் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காப்புறுதி பணம்

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்வதற்காக முறைப்பாடுகளை அளிப்பதாகவும் இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version