Home இலங்கை சமூகம் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் திருட்டு

இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் திருட்டு

0

சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் நகரில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அநுராதரபுரம் எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கு எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றில் இருந்தே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் திருட்டுத்தனமாக எரிபொருள் களவாடியுள்ளனர்.

இருவர் கைது

33 ஆயிரம் லீட்டர் எரிபொருள் ஏற்றி வந்திருந்த லொறியில் இருந்து அவர்கள் இருவரும் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருளைத் திருடியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர்கள் இரண்டு பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version