Home இலங்கை அரசியல் மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள மற்றுமொரு தரப்பு அம்பலம்

மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள மற்றுமொரு தரப்பு அம்பலம்

0

2022 அரகலய போரட்ட காலத்தில் தீ வைப்புகளினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்காக 92 முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களும் ரூ. 620 மில்லியன் இழப்பீடு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை ஹொரண பிரதேசததில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் இன்று (03) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

பில்லியன் கணக்கான இழப்பீடு 

இதேவேளை, 2022 மே 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது தீ வைப்புகள் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்கு இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பெப்ரவரி 6 ஆம் திகதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் சமர்பித்திருந்தார்.

குறித்த பட்டியலின் படி, 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டிருந்ததாக அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version