ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayake) ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அரசாங்கம் இடைக்கால அடிப்படையில் குறைநிரப்புப் பிரேரணை மூலம் செலவுகளை ஈடு செய்யத் தீர்மானித்துள்ளது.
அநுரவிற்காக நிதி ஒதுக்கீடு
இதன்படி ஜனாதிபதி அநுரவிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) ஒதுக்கப்பட்ட அதே அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய ஜனாதிபதி அநுர ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்லா தொகையையும் செலவிடமாட்டார் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் சில துறைகளுக்காக குறைநிரப்பு பிரேரணை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீடு செய்யப்படும் அனைத்து நிதியும் செலவிடப்படும் என கருத வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை திறைசேரியில் எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளார்.