Home இலங்கை அரசியல் வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு கஜேந்திரகுமாரே பொறுப்பு..! டக்ளஸ் பகிரங்கம்

வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு கஜேந்திரகுமாரே பொறுப்பு..! டக்ளஸ் பகிரங்கம்

0

2009 ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு கஜேந்திரகுமாரே பொறுப்புக்கூற வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தைக் கையிலெடுத்த கஜேந்திரகுமார் (Gajendrakumar Ponnambalam) அரசாங்கம், இராணுவம், விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியோருடன் கதைத்திருக்கின்ற நிலையில் அவரே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என டக்ளஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர் கஜேந்திரகுமாரே வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு கூறியுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு கஜேந்திரகுமார் பொறுப்புக்கூற வேண்டும் என சிறீதரன் எம்.பி கூட பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்திற்காக கஜேந்திரகுமார் உள்ளூர் நீதிமன்றங்களை நாட வேண்டும், சர்வதேச சமூகத்திற்கு செல்ல வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையில் கதைத்திருக்க வேண்டும்” என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……

https://www.youtube.com/embed/OZeRxBsA2r8

NO COMMENTS

Exit mobile version