Home முக்கியச் செய்திகள் ரில்வின் சில்வாவின் கருத்தை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்

ரில்வின் சில்வாவின் கருத்தை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்

0

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் மாற்றம் முற்றிலும் தமிழ் தேசிய அரசியலை கேள்விகுட்படுத்துவதாக உள்ளது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva), வடகிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு அவசியமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய முன்னணியை தவிர மற்றைய அனைவரும் ஒற்றையாட்சி அரசியலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு வழங்கும் அறுதிப்பெரும்பான்மைக்கு அமையவே இந்த அநியாயத்தை தடுக்க முடியும்.

சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் , தேர்தல் முடிந்து அடுத்த கிழமை இந்திய தூதுவரிடம் சரணாகதியடைந்து ஒற்றையாட்சி முறையை வலியுறுத்தி வந்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை வரவில்லையாயின் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட வரலாறு பதியப்படும்” என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

https://www.youtube.com/embed/2YHDnaNWBg8

NO COMMENTS

Exit mobile version