Home முக்கியச் செய்திகள் குறுகிய நாட்களில் 41 ஆயிரம் கோடிக்கு மேல் கடன்: புதிய அரசாங்கத்தின் மேல் எழுந்துள்ள குற்றச்சாட்டு

குறுகிய நாட்களில் 41 ஆயிரம் கோடிக்கு மேல் கடன்: புதிய அரசாங்கத்தின் மேல் எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன (Rohini Kaviratne) நேற்று (16) தம்புள்ள பிரதேசத்தில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்கின்றது.

 பெருந்தொகை பணம்

எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.

அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது.

அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கான 3000 ரூபாவினை இன்னமும் செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி, 9ஆம் திகதி, 11ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version