Home இலங்கை அரசியல் தேவைக்காக அநுர தமிழ் மக்களுக்கு செருப்பாகவும் இருப்பார் : கடுமையாக சாடிய கஜேந்திரன்

தேவைக்காக அநுர தமிழ் மக்களுக்கு செருப்பாகவும் இருப்பார் : கடுமையாக சாடிய கஜேந்திரன்

0

ஜே.வி.பியினுடைய புதிய அரசியலமைப்பை தமிழர்களிடத்தில் ஒப்பேத்தும் வரைக்கும் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தமிழ்களின் கால் செருப்பாகவும் இருப்பார் என என தமிழ் தேசிய மக்கள் முண்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (
S. Kajendran) கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை ஏமாற்றும் ஜே.வி.பியின் பசப்பு வார்த்தைகள் எல்லாம் தமிழர்களிடையே அவர்களுடைய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரைக்கும் மட்டும்தான்.

ஜே.வி.பியின் புதிய அரசியல் அமைப்பை ஒப்பேத்துவதற்கு அவர்களுக்கு தமிழர்களின் வாக்குக்கள் கட்டாயம் தேவை.

மேலும், தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தோல்விக்கான காரணம், அநுரவின் அரசியல் எதிர்காலம், தமிழர்களின் அரசியலில் அநுரவின் வகிபங்கு மற்றும் ஆட்சி மாற்றம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/w6IDtUaFqLI

NO COMMENTS

Exit mobile version