Home இலங்கை பொருளாதாரம் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பு:அச்சுறுத்தும் போராசிரியர் காமினி வீரசிங்க

பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பு:அச்சுறுத்தும் போராசிரியர் காமினி வீரசிங்க

0

‘டித்வா’சூறாவளி இலங்கை பொருளாதாரத்திற்கு மரண அடியை கொடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர் போராசிரியர் காமினி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொவிட் பாதிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலைமையிலிருந்து மெல்ல மெல்ல மீட்சி பெரும் இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. 

பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் பாதிப்பு

இலங்கை பொருளாதாரத்தில் 5 வீத வளர்ச்சியை இன்று வரை பெற்றுக் கொண்டு ஒரு நிலையான தளத்தில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ‘டித்வா’ சுழற்றி அடித்துள்ளது.
இது இலங்கையில் அனைத்து துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றை மீளுருவாக்க பாரிய நிதியளிப்பு தேவைப்படுகிறது.அதற்காக IMFயிலும் 206 மில்லியன் அவசர கடனை பெற்றுக் கொண்டுள்ளோம்.எதிர்காலத்திலும் கடன் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படலாம்.

ஆனால் அது முடியுமா? என குறிப்பிட முடியாது.ஏனென்றால் கடனை மீள செலுத்துவதற்கான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக் கொள்வதை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

‘டித்வா’ பாதிப்பில் ஏற்றுமதி வருவானம் குறைவடையலாம்.அதனால் இறக்குமதி அதிகரிக்க கூடும்.அது எங்களின் வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும் 2027 ஆம் ஆண்டில் கடன் மீள் செலுத்த வேண்டும்.இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை நோக்கியே செல்லகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version