Home முக்கியச் செய்திகள் கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

  கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.

   உதார நிர்மல் என்ற சந்தேகநபருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிம் அட்டைகளை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில்  கைது

இதன்படி, சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிம் அட்டைகளை (SIM Cards) வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

NO COMMENTS

Exit mobile version