Home ஏனையவை ஆன்மீகம் இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பெருவிழா

இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பெருவிழா

0

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும்
விநாயகர் சதுர்த்தி நாட்டில் பல ஆலயங்களில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று (07) யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கொட்டோடைப்
பிள்ளையார் ஆலயத்தில் சதுர்த்தி உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற விசேட சதுர்த்தி உற்சவத்தில் அடியவர்கள்
பலரும் கலந்து சிறப்பித்து விநாயக பெருமானை பக்தி பூர்வமாக வழிப்பட்டு சென்றுள்ளனர்.

நுவரெலியா

இதேவேளை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நுவரெலியா – பதுளை பிரதான வீதி இலக்கம் 60 இல் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி கோவிலில் நிகழும் சுப மங்களகரமான குரோதி வருஷம் ஆவணி மாதம் 22ஆம் நாளான நேற்று (07) அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்று பின்னர்
வசந்த மண்டப பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருடார்ந்த சந்தன பிள்ளையார் ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

சந்தன பிள்ளையார் ஊர்வலமானது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆலய நிர்வாகத்தினர் ஊடாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்புப் பூஜை வழிபாடுகள் செய்து நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி ஆலயத்தில் இருந்து நடை பவனியாக ஊர்வலம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்து கங்கையில் கரைத்து விடப்பட்டுள்ளது.

குறித்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும் சந்தன பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டதுடன் அனைவருக்கும் இறுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.

செய்தி – திவாகரன்

NO COMMENTS

Exit mobile version