Home முக்கியச் செய்திகள் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

0

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E. (O/L) EXAMINATION) இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதி சீட்டுகளைப் பெற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவிடம் தெரிவிக்கையில், ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

விண்ணப்பதாரர்கள்

இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் படி, 452,979 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர் அவர்களில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாத இந்தியர்கள்: வெளியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version