Home முக்கியச் செய்திகள் 13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த இரட்டையர்கள்

13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த இரட்டையர்கள்

0

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 13 வயதுடைய இரட்டைச் சகோதரர்கள் தோற்றி சாதனை படைத்துள்ளனர்.

இதன்போது, நுகேகொட களுபோவில பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

மாணவர்களின் சாதனை

இந்த இரண்டு இரட்டை சகோதரர்களில் பெண் பிள்ளையான டபிள்யூ.பி.பி. நித்திகா சத்யா, நுகேகொட, சென்.ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் போது, ​​அண்மையில் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் தோற்றி ஏழு திறமைச் சித்திகளையும் ஒரு சாதாரண சித்தியையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, அவருடன் அதே பரீட்சையில் தோற்றிய கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் அவரது சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் என்ற மாணவனும் சித்தியடைந்துள்ளார்.

சிறுவயதிலேயே சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில் இரு மாணவர்களும் அவர்களது பாடசாலைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இந்தச் சாதனையை எட்ட முடிந்ததாக அவர்களது தந்தை டபிள்யூ. பி. பி.நிஷாந்த தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version