Home இலங்கை கல்வி சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்

சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்

0

2023/2024 ஆண்டுக்கான சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 31.10.2024 ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கை

இது தொடர்பில் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான மாணவர்களின் தொழிற்கல்வி பாடத்துக்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கல்வி அமைச்சு 2024/2025 கல்வியாண்டுக்கான உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக 12ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது மற்றும் பாடநெறியின் கல்வி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version