சுயலாப அரசியலுக்காக 1974ஆம் ஆண்டிலிருந்து முன்வைக்கப்பட்ட கோஷம்தான் ஐக்கியம், சர்வதேசத்திற்கு நமது பிரச்சினைகளை காட்ட வேண்டும் என்பதோடு தற்போது பொது வேட்பாளர் என்ற கோஷம் உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (12.09.2024)
நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பியானது ஒரு சரியான வழிகாட்டலை தான் மக்களுக்கு வழங்கி வருகின்றது. வரலாறும் அதை நிரூபித்துள்ளது.
இதனால்தான் நாம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க அறைகூவல் விடுக்கின்றோம். ஏனென்றால் அவராலேதான் இந்த நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
எமது கொள்கையும் வழிமுறையும் சரியானதாக இருப்பதை கண்டு அதுதான் வெற்றி அடையப்
போகின்றது என்ற உண்மையை உணர்ந்த சக தமிழ் கட்சிகளும் குழுக்களும் அச்சம்
கொண்டு தமிழ் தேசிய கூட்மைப்பு என்ற ஒன்றை கட்டமைத்து அரசியல் செய்தார்கள்.
ஆனால் சக தமிழ் கட்சிகளிடம் நிலையான கொள்கை ரீதியாக எந்தவொரு வேலைத் திட்டமோ
அதற்கான பொறிமுறையோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மேலதிக தகவல் – கஜி