Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் இரு முனைப் போட்டி! அநுர தரப்புக்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் இரு முனைப் போட்டி! அநுர தரப்புக்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள்

0

மிதமிஞ்சிய ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நீதித்துறையை பொருட்படுத்தாதமை, பிழையான சட்டங்கள் என்பவற்றாலேயே,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் அபார வெற்றியீட்டியதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி இலகுவாகப் பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரவின் வெற்றி குறித்து பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் வெற்றி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

வெற்றியின் முதல் கட்டம் நடந்தேறி விட்டது. இப்போது இரண்டாவது கட்டத்தினுள் நுழைந்திருக்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ளன.

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றியாகும்.

நாட்டில் அதிகூடிய வாக்குகள் உள்ள கம்பஹா மாவட்டத்தில் 460,000 வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.

ஜனாதிபதிக்கு கிடைத்த 12 லட்சம் பெரும்பான்மை வாக்குகளில், மேல்மாகாணத்தில் மாத்திரம் 09 இலட்சம் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு தொகுதியையும் வெல்லவில்லை.

இதனால், ஜனாதிபதித் தேர்தலிலிருந்த மும்முனைப் போட்டி, நாடாளுமன்றத் தேர்தலில் இருமுனைப் போட்டியாக மாறும்.

மொத்தமாகவுள்ள 160 தொகுதிகளில், ஜனாதிபதி அநுர குமார திசாயக 105 தொகுதிகளில் வெற்றியீட்டியதுடன் சஜித் பிரேமதாஸ 49 தொகுதிகளிலேயே வென்றுள்ளார்.

இது முப்பது வீதமாகவே உள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதிபதியின் தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை இலகுவாகப் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version