Home இலங்கை அரசியல் ஜெனீவா கூட்டத் தொடரில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

ஜெனீவா கூட்டத் தொடரில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்காக வடக்கு – கிழக்கு வழிந்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா
தலைமையிலான குழு சென்றுள்ளனர்.

இவர்கள் நேற்றையதினம் ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

குறித்த குழுவில் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்
சங்க உபசெயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி ஆகியோர் விஜயத்தில்
கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்றுமுதல் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் அமர்வின் முதல் நாளான இன்று (09) பிற்பகல் 12.30 மணிக்கு இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

பிற்பகல் வரை நடைபெற உள்ள இந்த விவாதத்துக்கு பின்னர் 5 மணிக்குஇலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் பக்க நிகழ்வொன்றுக்கும் ஏற்பாடாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version