Home உலகம் மீண்டும் அனுமதி வழங்கும் ஜெர்மனி.! இஸ்ரேலுக்கு தொடங்கும் ஆயுத ஏற்றுமதி

மீண்டும் அனுமதி வழங்கும் ஜெர்மனி.! இஸ்ரேலுக்கு தொடங்கும் ஆயுத ஏற்றுமதி

0

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட கடும் ராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

குறிப்பாக, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் காசா மீது நடைபெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஜெர்மனி இஸ்ரேலுக்கான இராணுவத உபகரண ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது.

மீண்டும் அனுமதி

இந்நிலையில், தற்போது அந்தத் தடையை ஜெர்மன் அரசு நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Image Credit: 
Bloomberg

அதன்படி, எதிர்வரும்ட 24ஆம் திகதி முதல் ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு 

2023ஆம் ஆண்டில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

Image Credit: Al Jazeera

இதன் பின்னர், காசா மீது விரிவான ராணுவ நடவடிக்கை தொடங்கிய இஸ்ரேல், தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version