மாத இறுதி நெருங்கி வரும் நிலையில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளும் முன்னதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ரஷ்யா மீதான தடைகள் உட்பட பல காரணிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய எரிபொருள் விலைகளின் தற்போதைய உயர்வு குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மதிப்பீடு செய்து வருவதாக அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் அதிகரிப்பு
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், உலக சந்தையில் ஏற்படும் அதிகரிப்பை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
உலக சந்தையில் முதல் மூன்று வாரங்களில் விலை வளைவு அதிகரிக்கும் போக்கைக் காட்டும் நிலையானது இலங்கையின் முன்னணி பெட்ரோலிய வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த எரிபொருள் விலை திருத்தமானது எவ்வாறு அமையும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
