Home இலங்கை சமூகம் மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!

0

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின்
மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(02) மாலை 4 மணியளவில் நினைவேந்தல்
இடம்பெற்றுள்ளது.

இதன்போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ். ஊடக அமையத்தின்
தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தியுள்ளார்.

மலர் அஞ்சலி 

ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு
(Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கென்று ஒரு
இடத்தினை தக்க வைத்துள்ளார். 

சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும்
பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு,
வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார்.

இதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021 செப்டம்பர் 2ஆம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி
உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version