கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மைக் மோகன், லைலா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் வருவார் என்று கூறப்படுகிறது.
சாட்டிலைட் ரைட்ஸ்..
கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? என ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் நேரத்தில் இப்படம் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமம், ரூபாய் 90 கோடிகளுக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Source: https://cineulagam.com/article/goat-movie-satellite-rights-1718349848
