Home சினிமா GOAT ஒடிடி-யில் வரப்போகும் பெரிய சர்ப்ரைஸ்! வெங்கட் பிரபு சொன்ன முக்கிய தகவல்

GOAT ஒடிடி-யில் வரப்போகும் பெரிய சர்ப்ரைஸ்! வெங்கட் பிரபு சொன்ன முக்கிய தகவல்

0

விஜய்யின் GOAT படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. முதல் நான்கு நாட்களில் இந்த படம் 288 கோடி ருபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் தற்போது அறிவித்து இருக்கிறார்.

இப்படி வசூல் சாதனை படைத்து வரும் GOAT படம் பற்றி வெங்கட் பிரபு பல்வேறு விஷயங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

ஒடிடி-யில் சர்ப்ரைஸ்

GOAT படம் ஒடிடியில் வரும்போது ரசிகர்களை குஷிப்டுத்த வெங்கட் பிரபு ஒரு விஷயத்தை செய்ய போகிறாராம்.

இந்த படத்தின் உண்மையான நீளம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் தானாம். அதை முழுவதுமாக ஒடிடி-யில் வெளியிட முயற்சி செய்வதாக அவர் கூறி இருக்கிறார்.

தியேட்டர்களில் வெளியான GOAT படம் சுமார் 3 மணி நேரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தியேட்டரில் பார்க்காத பல காட்சிகளை ரசிகர்கள் ஒடிடியில் பார்க்க முடியும். 

Source: https://cineulagam.com/article/goat-ott-release-to-have-all-deleted-scenes-1725909511

NO COMMENTS

Exit mobile version