Home இலங்கை அரசியல் ரணிலை அதிபராக்கி சஜித்தை பிரதமராக்க எதிர்க்கட்சி திட்டம்!

ரணிலை அதிபராக்கி சஜித்தை பிரதமராக்க எதிர்க்கட்சி திட்டம்!

0

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிபராகவும் மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பிரதமராகவும் ஆனால்  நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

அத்தோடு ரணில் விக்ரமசிங்கவும் மற்றும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் மாறினால் கூட நாட்டின் போக்கு மாறிவிடும்.

இதனால் சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் அத்தோடு இலங்கையால் சர்வதேச கடன் மீள்செலுத்துகையில் இருந்து ஒரு படி கூட முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

வங்குரோத்து நிலை

பல்வேறு தேரர்கள் கூறும் பொய்யான கதைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது அத்தோடு அதிபரும் மற்றும் மத்திய வங்கியும் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேலும், நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டால் அங்கு எந்த கட்சி ஆட்சியை அமைத்தும் பயனில்லை எனவே ரணில் அதிபராகி சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது.” என அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/rajitha-senaratne-opinion-on-presidential-election-1718503229

NO COMMENTS

Exit mobile version