Home சினிமா குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன், எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அஜித்தின் கரியர் பெஸ்ட் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த நிலையில், உலகளவில் ரூ. 246 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் வெளிநாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

வெளிநாட்டு வசூல் விவரம்

இப்படம் வெளிநாட்டில் முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இதற்கு முன் வெளிநாட்டில் அதிக வசூல் செய்திருந்த அஜித் திரைப்படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை வெளிநாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-overseas-collection-report-1745390322

NO COMMENTS

Exit mobile version