Home சினிமா சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

0

பொதுவாக புது படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. அதுவும் தற்போது கோடை காலம் வந்துவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். இதன் காரணமாக,  பல படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

அந்த வகையில், அடுத்து 5 வாரங்களுக்கு வெளியாகும் சூப்பர் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

கேங்கர்ஸ்: 

சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் நாளை அதாவது 24 – வது ஏப்ரல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.

சுமோ:  

சிவா நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 25 – ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சுமோ.

மோசமான கமெண்ட்கள், உருவ கேலி.. சீரியல் நடிகை வைஷ்ணவி வருத்தம்

ரெட்ரோ vs டூரிஸ்ட் பேமிலி:
 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் உழைப்பாளர் தினத்தன்று அதாவது, மே 1 – ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தின் தோல்விக்கு பின் ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்திற்கு போட்டியாக சிம்ரன் – சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் அபிஷன் இயக்கி உள்ளார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் vs மாமன்:

சந்தானம் நடிப்பில் வரும் மே 16 – ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்திற்கு போட்டியாக சூரி நடித்த மாமன் திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ஏஸ் (Ace):

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் மே 23 – ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் ஏஸ்.

தக் லைஃப்: 

கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி திரைக்கு வர உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version