Home இலங்கை அரசியல் யாழில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் : உச்சநீதிமன்றத்தை நாடும் சுயேட்சை குழு

யாழில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் : உச்சநீதிமன்றத்தை நாடும் சுயேட்சை குழு

0

யாழ் மாநாகர் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான
சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (24) வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக
சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுயேச்சை குழுவின் தலைவர்
சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.

அரசின் சூழ்ச்சி

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு
காரணம்.

எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம்
சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி
மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.

இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம்
தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர்களுடன் ஆலோசனை 

ஆனால், நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.

அதன்படி யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள
முடியாது.

இவ்விடயம் குதித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.

அதன்படி, தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version