Home இலங்கை சமூகம் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு…! வெளியான புதிய அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு…! வெளியான புதிய அறிவிப்பு

0

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalith Dharmasekera) தெரிவித்துள்ளார்.

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்களுக்கு இல்லை என்றும் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்க முடியாது 

முழு நாட்டிற்கும் கட்டணத்தை தீர்மானிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் அதே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெட்ரோலின் விலை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாததால் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும் போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version