Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் பின்னால் உயர் பதவிகளில் இருக்கும் செம்மணி படுகொலையாளிகள் ..

ஜனாதிபதியின் பின்னால் உயர் பதவிகளில் இருக்கும் செம்மணி படுகொலையாளிகள் ..

0

 செம்மணியில் நடந்தேறிய கொடூரங்களுடன் தொடர்புடைய பலர் உயர் பதவிகளைப் பெற்று ஜனாதிபதிகளின் பின்னால் செழுமையாக நிற்கின்றார்கள் என்று சமூகசெயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“யுத்தக்காலத்தில் தமிழ்மக்களை இலங்கை இராணுவம் எவ்வாறு கையாண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

செம்மணிவிவகாரத்தில் ஒரு சிங்கள இராணுவசிப்பாயே சாட்சியாக இருப்பதால் இந்த விடயம் முக்கியமானதாக காணப்படுகின்றது.

தங்களுடைய மேலதிகாரிகளின் கட்டளைப்படி கொன்றவர்களை புதைத்துள்ளோம் என இராணுவசிப்பாய் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு கட்டளையிட்ட இராணுவஅதிகாரிகள் தற்போது வெளியில் சுதந்திரமாக உள்ளனர்.

கொலை செய்தவர்கள் வெற்றிநாயகர்களாக கொண்டாடப்படுகின்றார்கள்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…

NO COMMENTS

Exit mobile version