தோல்விபயம் ஒருவனுக்குப் பிடித்துவிட்டால் அவன் என்னவென்னவெல்லாம் செய்வான் என்பதற்கு இன்று ‘சுமோ’ செய்த ஒரு காரியம் நல்ல உதாரணம்.
கடந்த பொதுத்தேர்தலில் சிறி வாத்தியின் புண்னியத்தில் அரும்பொட்டில் வென்றவர்தான் ‘சுமோ’.
செய்கிற அநியாயங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு இம்முறையும் புண்னியம் தேடி ‘சுமோ’ கிளிநொச்சிபோய் மூக்குடைபட்ட கதை கேட்டு சிரியாய்ச் சிரிக்கின்றது தமிழரசு வட்டாரம்.
கட்சி சம்பந்தப்பட்ட ஒரு பேச்சைமுடித்துக்கொண்டு சிறி வாத்தி கிளிநொச்சி வந்துகொண்டிருந்திருக்கின்றார்.
அந்தப் பேச்சுவார்த்தை முழுவதும் சிறி வாத்திகூடவே நின்ற சுமோ, வாகனத்தில் சிறிவாத்தி பயணித்துக்கொண்டிருந்தபோது அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பத்திரத்தில் ஒரு சிறு திருத்தம் செய்யவேண்டும்… நான் கிளிநொச்சியில் வந்து உங்களைச் சந்திக்கலாமா” என்று கேட்டிருக்கின்றார்.
சிறி வாத்தியுடன் பேசியதும் பேசாததுமாக ஊடகங்களுக்கும் அறிவித்து ஊடகவியலாளர்களையும் கிளிநொச்சிக்கு அழைத்துவிட்டார் சுமோ.
‘அரியும் சிவனும் ஒன்று.. அறியாதார் வாயில் மண்ணு’ என்பது போல ‘சுமோவும் சிறி வாத்தியும் ஒன்று’ என்று உலகிற்குக் காட்டும் கபட திட்டம்.
வாத்திக்கும் சுமோவின் விளையாட்டு விளங்கி, உடனே கிளிநொச்சியைவிட்டு புறப்பட்டுவிட்டாராம்.
பம்மாத்துக் காண்பிக்கவந்த சுமோ, அங்கு சிறியார் இல்லாமல் தடுமாறி, வந்த கமெராக்காரர்களிடம் வழிந்து, நெளிந்து தோல்வியோடு திரும்பியிருக்கின்றார்.
இதில் கிளிநொச்சி தமிழரசுத் தம்பிகள் இன்னுமொரு சிறப்பான வேலைகளைச் செய்திருக்கின்றார்களாம்.
சுமோ கிளிநொச்சிக்கு வருவதற்கு முன்னதாகவே, கட்சி அலுவலகத்தில் இருந்த பதாதைகள், சின்னங்கள், சுவரொட்டிகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டார்களாம்.
வெறும் கட்டிடத்திற்கு முன்பாக நின்று போட்டோ மாத்திரம் எடுத்துவிட்டுத் திருமம்பியிருக்கின்றார் ‘சுமோ’.
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் ‘சுமோ’ மற்றொருதடவை கிளிநொச்சி வந்து முருங்கைமரம் ஏறுவார் என்று கூறி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்களாம் கிளிநொச்சி தமிழரசு இளைஞர்கள்.