Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது எமது பொறுப்பல்ல: கோட்டாபய பதிலடி

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது எமது பொறுப்பல்ல: கோட்டாபய பதிலடி

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசியல்வாதிகளின் பொறுப்பல்ல என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajpaksha) பதிலளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோட்டாபய ராஜபக்ச தவறி விட்டதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியதற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தவறிவிட்டதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

1000 மில்லியன் ரூபா இழப்பீட்டை கோரும் மைத்திரி

குற்றப்புலனாய்வு பிரிவினர்

ஆனால், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது பொலிஸ், சட்ட மா அதிபர் மற்றும் நீதித்துறை அமைப்புக்களின் கடமையாகும்.

குறித்த சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதோடு தாக்குதலுடன் தொடர்புடைய 93 பேருக்கு எதிரான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளை விசாரித்து வந்தனர்.

மக்களுக்கான வலியுறுத்தல் 

எனினும், தாக்குதல் நடைபெற முன் அவர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தவறிவிட்டனர்.

கர்தினால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக என் மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவத்தை மக்கள் கவனமாக பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலதிக வகுப்பு ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பொலிஸாரால் கைது

மகிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version