Home சினிமா விஜய் படத்தை கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்கள்.. யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது

விஜய் படத்தை கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்கள்.. யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது

0

விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ள விஜய், தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என கூறியுள்ளார். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்கள்

தளபதி 69 படத்தை முதலில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்கவிருந்தனர். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை, திடீரென இந்த படத்திலிருந்து அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியேறிவிட்டது.

பின் இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் லலித் குமார் தயாரிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லை என கூறுகின்றனர். இந்த நிலையில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தளபதி 69 படத்தை கைப்பற்ற விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் மூலம் முயற்சி செய்து வருகிறார்களாம்.

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்.. சூப்பர்ஹிட் கூட்டணி

அதே போல் Goat படத்தை தயாரித்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனமும் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இப்படி தளபதி 69 படத்தை கைப்பற்ற முன்னணி நிறுவனம் போட்டிபோட்டு வரும் நிலையில், யார் அந்த வாய்ப்பை பெறப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version